×

சிறு தொழில் கடன் வழங்க 3 ஆண்டாக அலைக்கழித்த வங்கி மாற்றுத்திறனளி தம்பதி கலெக்டரிடம் புகார் மனு

விருதுநகர், ஜூன் 26: சிறு தொழில் துவங்க ரூ.50 ஆயிரம் கடன் வழங்க 3 ஆண்டாக மாற்றுத்திறனாளி தம்பதியை வங்கி அலைக்கழிப்பு செய்ததால் கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிவகாசி தாயில்பட்டியை சேர்ந்த திருமலைக்குமார் என்ற மாற்றுத்திறனாளி அளித்த மனு:கணவன்-மனைவி இருவரும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளோம். 7 வயதில் மகன் உள்ள நிலையில் தினசரி வாழ்வாதாரத்தை ஓட்டுவது சிரமமாக உள்ளது. சிறு மற்றும் குறு தொழில் துவங்க சுய வேலைவாய்ப்பு வங்கி கடன் திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் மானியத்தில் ரூ.50 ஆயிரம் கடன் வழங்க, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தாயில்பட்டி ஐஓபி வங்கி கிளைக்கு 23.1.2016ம் தேதி பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது.

ஆனால் தாயில்பட்டி வங்கி கிளை மேலாளர், சிறுதொழில் கடன் வழங்க மறுத்து வருகிறார். மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் 10.11.2018ல் அதே வங்கி கிளைக்கு ரூ.25 ஆயிரம் மானியத்தில் ரூ.75 ஆயிரம் சிறு தொழில் கடன் வழங்க பரிந்துரை செய்தது. அதற்கும் வங்கி கிளை கடன் வழங்க மறுத்து வருகிறது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க முடியாது என திட்டவட்டமாக வங்கி கூறி வருகிறது.மூன்று வருடமாக சிறு தொழில் கடன் வழங்க மறுத்துவரும் வங்கி கிளை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சிறு தொழில் கடன் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...