×

குடிநீர், 100 நாள் வேலைக்கு கூலி கேட்டு சிவகாசி, திருவில்லிபுத்துரில் மனு கொடுக்கும் போராட்டம்

திருவில்லிபுத்தூர்/சிவகாசி, ஜூன் 26: குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், 100 நாள் வேலைக்கு கூலி கேட்டும், சிவகாசி மற்றும் திருவில்லிபுத்தூரில் அகில இந்திய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.சிவகாசி ஒன்றியத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க வலியுறுத்தியும், 100 நாள் வேலை திட்டத்தில், வேலை கொடுக்க வலியுறுத்தியும், அதற்கு கூலி கொடுக்க வலியுறுத்தியும், வேலைக்கான அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சிவகாசியில் நேற்று மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாகஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுப்பிரமணியனிடம் அகில இந்திய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும் வெள்ளூர் ஊராட்சியில் உள்ள சோமசுந்தரபுரம் கிராமத்தில் மயான ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினர். இதில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூ., வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்துவேல், ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவில்லிபுத்தூர்:நூறு நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். சம்பள நிலுவை தொகையை வழங்க வேண்டும். கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, திருவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தில் அகில இந்திய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதி லட்சுமி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். சிஐடியூ சந்தனம், திருவில்லிபுத்தூர் மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்