×

விழுப்புரத்தில் இலவச பால் கலப்பட பரிசோதனை முகாம்

விழுப்புரம், ஜூன் 26: விழுப்புரத்தில் இலவச பால் கலப்பட பரிசோதனை முகாமை ஆட்சியர்சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.விழுப்புரம்  ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும்  மருந்து நிர்வாகத்துறை சார்பில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிக்கான  இலவச பால் கலப்பட பரிசோதனை முகாமை ஆட்சியர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் விநியோகிக்கப்படும் பாலின்தரம்  குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் உணவு பாதுகாப்புத்துறையின்  சார்பில் பால் கலப்பட பரிசோதனை முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று விழுப்புரம் நகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்  இருந்து பொதுமக்கள் பசும்பால், எருமைமாட்டின் பால் ஒரு லிட்டர் அளவிற்கு  குறையாமல் ஆய்வுக்கு கொண்டு வந்தனர். பின்னர் பாலில் யூரியா,  காஸ்டிக்சோடா, திரவசோப்பு, சோடா, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் உப்பு  போன்றவற்றின் கலப்படம் உள்ளதா என இலவசமாக ஆய்வு செய்து கொடுக்கப்பட்டது.  

மேலும் இப்பரிசோதனை இன்று செஞ்சி பேரூராட்சி அலுவலகத்திலும், நாளை  திண்டிவனம் நகராட்சி, 28ம் தேதி திருக்கோவிலூர் பிடிஓ அலுவலகம், 29ம் தேதி கள்ளக்குறிச்சி நகராட்சி, 1ம் தேதி சின்னசேலம் பிடிஓ அலுவலகம், 2ம் தேதி  வானூர் பிடிஓ அலுவலகத்திலும், 3ம் தேதி உளுந்தூர்பேட்டை பேரூராட்சி  அலுவலகத்திலும் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட  உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் தட்சிணாமூர்த்தி, உணவுபாதுகாப்பு அலுவலர்கள்  கதிரவன், இளங்கோ, மோகன், பிரசாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை