ஆத்தூர் கோயிலில் வருஷாபிஷேகம்

ஆறுமுகநேரி, ஜூன் 26:  சேர்ந்தபூமங்கலத்தில் சைவ வேளாளர் சமுதாயத்தற்கு பாத்தியப்பட்ட ஆரியநாச்சி அம்பாள் கோயிலில் வருஷாபிஷேக விழா மஹா கணபதி ஷோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை நடந்தது. நண்பகல் 12 மணிக்கு விமான  கோபுர கலசங்களுக்கும், தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கும்  புனித நீர் ஊற்றி மஹா அபிஷேகம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் உச்சிகால சிறப்பு அலங்கார தீபாராதனைக்கு பிறகு அன்னதானம் நடந்தது. இரவு 7 மணிக்கு அம்பாள் வீதியுலாவும்,  இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் பிரமநாயகம் பிள்ளை, உறுப்பினகர்கள் சங்கரன், வெங்கடசுப்பிரமணியன், நல்லபெருமாள், ஆரியமுத்து, சின்னக்கண்ணு செய்திருந்தனர்.     இதே போல் ஆத்தூர் குளக்கரை கன்னிவிநாயகர் கோயிலில்  வருஷாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு மலரால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.  பின்னர் ஆலயத்தில் உள்ள துர்க்கை அம்மன், ஆஞ்சநேயர், நவகிரக நாயகர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு  சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர்.

Related Stories: