கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பேற்பு

கோவில்பட்டி, ஜூன் 26:கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர்மன்னன் மாறுதலாகி சென்றதால் விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் கூடுதல் பொறுப்பேற்று கவனித்து வந்தார்.

இந்நிலையில் விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த இளங்கோ பதவி உயர்வு பெற்று கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலராக நியமிப்பட்டுள்ளார். இதையடுத்து பொறுப்பேற்று கொண்ட இளங்கோவிற்கு, அலுவலக பொறுப்புகளை விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் ஒப்படைத்தார்.

Related Stories: