கோவில்பட்டி அருகே மண் பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை, ஜூன் 26: வாகைக்குளம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையம் கோவில்பட்டி அருேக வில்லிச்சேரி கிராமத்தை தத்தெடுத்து பல்வேறு பணிகளை செய்யவிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இம்முகாமில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மண் மாதிரிகள், கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்தனர். கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கமருந்து, செயற்கை கருவூட்டல் ஊசிபோடப்பட்டது. அய்யனாரூத்து, வில்லிச்சேரி கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் பாலமுருகன், செல்வி ஆகியோர் சிகிச்சை அளித்தனர். விவசாயிகளுக்கு, மண்பரி சோதனையின் அவசியம் மற்றும் மண்மாதிரி எடுக்கும் முறை குறித்து எடுத்துரைப்பட்டது. எலுமிச்சையில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. விவசாயிகளிடையே மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. விவசாயிகளிடத்தில் வேளாண்மை அறிவியல் மைய தலைமை விஞ்ஞானி கால்நடை மருத்துவர் சீனிவாசன் விஞ்ஞான முறையில் வேளாண்மை சாகுபடி, கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளும் உதவிகளும் வழங்கப்படும்என்றார். ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் மையத்தின் விரிவாக்க துறை வல்லுனர் பகவத்சிங், உழவியல் துறை வல்லுனர் முருகன், பூச்சியல் துறை வல்லுனர் முத்துக்குமார், உதவியாளர்கள் ஜெயக்குமார், ராஜேஸ்வரன், வில்லிச்சேரி பஞ்சாயத்து எழுத்தர் வெங்கடேஸ்வரன், தன்னார்வ பணியாளர் ரெஜினா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: