×

தென்காசி நகராட்சியை கண்டித்து காலிகுடங்களுடன் திமுக ஆர்ப்பாட்டம்

தென்காசி, ஜூன் 26: தென்காசியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நகர திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சாதிர் தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் சொக்கலிங்கம், நடராஜன், பால்ராஜ், கலைபால்துரை, பாலப்பிரமணியன், அப்துல்கனி, ஷேக்பரீத் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் கோமதிநாயகம் வரவேற்றார். மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் ராஜா தொகுத்து வழங்கினார்.  மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது: திமுக ஆட்சியில் இருந்தபோது குடிநீர் தடையின்றி முறையாக விநியோகிக்கப்பட்டது. மின்தடை ஏற்பட்டாலும் தென்காசி நகராட்சியில் தடையின்றி குடிநீர் வழங்க வசதியாக ரூ.60 லட்சத்தில் ஜெனரேட்டர் வாங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த ஜெனரேட்டரை இயக்குவதற்கு கூட டீசல் வாங்கி கொடுக்க முடியாத அரசாக எடப்பாடி அரசு உள்ளது. இதை கண்டிக்கிறோம், என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ரசாக், மாநில மாணவரணி துணை செயலாளர் ஷெரீப், மாநில பேச்சாளர் கடையநல்லூர் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர்கள் ஆயான்நடராஜன், பேபி, பொருளாளர் சேக்தாவூது, ஒன்றிய செயலாளர்கள் ராமையா, அன்பழகன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் இளைஞரணி இலத்தூர் ஆறுமுகச்சாமி, மாணவரணி வக்கீல் வெங்கடேசன், தொண்டரணி இசக்கிபாண்டியன், பகுத்தறிவு பேரவை வல்லம் திவான்ஒலி, பேச்சிமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி சிவக்குமார், வர்த்தக அணி வளன் அரசு, ஜெயக்குமார், துணை அமைப்பாளர்கள் சாமித்துரை, அழகுசுந்தரம், காதர்அண்ணாவி, முத்துக்கிருஷ்ணன், முத்துலதா, சங்கரன்வாத்தியார், கிட்டுபாண்டியன், சண்முகநாதன், கோமதிநாயகம், முகம்மது இஸ்மாயில், மாரிமுத்துபாண்டியன், தங்கபாண்டியன், யோவான், மாரிமுத்து, அழகுதமிழ்சங்கர், பாலாமணி, ராஜேந்திரன், பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் ஜீவானந்தம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் நாகராஜ்சரவணார்,

கீழப்பாவூர் இசக்கிமணி, பேரூர் செயலாளர்கள் மந்திரம், ஜபருல்லாகான், ரவி, நகர நிர்வாகிகள் மோகன்ராஜ், ராம்துரை, இசக்கித்துரை, கல்வத்து, காஜா, ராம்ராஜ், கோபால்ராம், கிட்டு, வடகரை ராமர், ராமச்சந்திரன், வார்டு செயலாளர்கள் கஜேந்திரன், சித்தார்த்தன், மாடசாமி, செல்லத்துரை, முகம்மது காசிம், அப்துல்காதர், செய்யது சுலைமான், குமார், ராமநாதன், பீர்முகம்மது, மகாலிங்கம், முகம்மதுஇஸ்மாயில், நமசிவாயம், பெருமாள்தாஸ், சோமசுந்தரம், மீனாட்சிசுந்தரம், ஜமாலுதீன், வேம்பு, யாகவாசுந்தர், நன்னை பாலு, ஆயிரப்பேரி முத்துவேல், காசிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நகர திமுக சார்பில் 33 வார்டுகளில் தினமும் 3 வார்டுகள் வீதம் டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1வது வார்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகத்தை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

Tags :
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது