×

இந்தியாவில் ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் உற்பத்தியாகி வரும் அனைத்து வாகனங்களுக்கும் பார்கோடுடன் உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் திருட்டு வாகனங்கள் எளிதில் சிக்கும்

வேலூர், ஜூன் 26: இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் உற்பத்தியாகி வரும் அனைத்து வாகனங்களுக்கும் பார்கோடுடன் 10 இலக்க எண் கொண்ட உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் நாள்தோறும் சுமார் 30 ஆயிரம் பேர் வரையில் புதிய ஓட்டுனர் உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமம் புதுப்பித்து வருகின்றனர். 43 ஆயிரம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில் உரிய ஆவணங்கள் இன்றியும், திருட்டு வாகனங்கள், ஒரே எண்ணில் 2 வாகனங்கள் என்று ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

இதுபோன்ற வாகனங்களில்தான் போலியான பதிவெண்களை ஒட்டிக்கொண்டு செம்மரம் கடத்துவது, திருட்டு வழிப்பறி போன்ற குற்றச்செயல்களுக்கு பயன்படுத்துவது என்று இந்தியா முழுவதும் தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாகவும் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும் விதமாக இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் தொடங்கி அனைத்து வாகனங்களுக்கும் 10 இலக்க பார்கோடு எண் கொண்ட உயர் ரக நம்பர் பிளேட் வழங்கப்படுகிறது. இந்த உயர்ரக நம்பர் பிளேட்டுகள் கடந்த ஏப்ரம் 1ம் தேதிக்கு பின்னர் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பைக், கார் என்று ஒவ்வொரு நிறுவனத்துக்கும் நம்பர் பிளேட்டுகள் வழங்க வென்டார்கள் உள்ளனர். இவர்கள் மூலமாக அந்தந்த மாநில எல்லைகளுக்கு உட்பட்ட ஆர்டிஓ அலுவலகங்களில் வழங்கப்படும் வாகனங்களுக்கான நம்பர்கள் அச்சிட்டு, நம்பர் பிளேட்டுகளை வழங்குவர்.

இதன் மூலம் திருட்டு வாகனங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். நம்பர் பிளேட்டுகளை உடைத்து போலியாக மாற்றினாலும் 10 இலக்க பார்கோடினை ஸ்கேன் செய்தால், வாகன ஊரிமையாளர் யார்? என்பது வெட்டவெளிச்சமாகும்.
தற்போது கடந்த ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களே பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த தேதிக்கு பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் பதிவுக்கு வரும்போது தான் உயர்ரக நம்பர் பிளேட்டுகளுடன் வாகனங்கள் பதிவு செய்யப்படும்.

அதோடு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்ய ஸ்கேனர் கருவியும் வழங்கப்படுகிறது. அதில் ஸ்கேன் செய்தால் தகுதிச்சான்று, இன்சூரன்ஸ், உரிமையாளர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும். இப்படி பல்வேறு வசதிகளுடன் இந்த உயர் ரக நம்பர் பிளேட்டுகள் வந்துள்ளது என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்