ஓமலூரில் காய்கறி விலை குறைவு

ஓமலூர், ஜூன் 25: ஓமலூர் வட்டாரத்தில் வெளிமாநில காய்கறிகள் வரத்து அதிகரிப்பால், காய்கறிகளின் விலை குறைந்ததால் விவசாயிகளும், வியாபாரிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர்.ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் தொடர்ந்து கொளுத்தும் வெயிலின் காரணமாக காய்கறிகள் மற்றும் தக்காளி வரத்து குறைந்தது. இதனால், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. தற்போது ஓமலூர் தினசரி காய்கறி சந்தைக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கடந்த வாரத்தை விட தற்போது விலை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில தினங்கள முன்பு கிலோ ₹50க்கு விற்பனையான தக்காளி, தற்போது கிலோ ₹20ல் இருந்து ₹40வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், மற்ற காய்கறிகளின் விலையும் கடுமையாக குறைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கிலோ ₹120க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் தற்போது கிலோ ₹80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ₹200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பட்டர் பீன்ஸ், தற்போது ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ₹190க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை பட்டாணி, ₹120க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ 40க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லித்தழை, தற்போது ₹80க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், வெண்டை, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. விலை குறைந்த நிலையில் விற்பனையும் சரிந்துவிட்டதால் விவசாயிகளும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: