அதிமுக சார்பில் மேட்டூர் ஆஞ்சநேயர் கோயிலில் யாகம்

ஓமலூர், ஜூன் 25: தமிழகத்தில் மழை பொழிய வேண்டி, அதிமுக சார்பில் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்தி வருகின்றனர். மேட்டூரில் கணேசர் , ஆஞ்சநேயர், வரதராஜ பெருமாள் கோயிலில் நகர அதிமுக சார்பில், மழை வேண்டி வேத விற்பன்னர்களைக் கொண்டு வருண யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், புனித நீர் மேட்டூர் அணையின் வலது கரையில், காவிரி நீரில் கலக்கப்பட்டது. இந்த பூஜையில் கலந்து கொண்ட மேட்டூர் எம்எல்ஏ செம்மலை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மேட்டூர்- வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 160 எம்.எல்.டி தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அங்கு 120 எம்.எல்.டி மட்டுமே எடுக்கப்படுகிறது. உபரியாக உள்ள 40 எம்எல்டியில் 10 எம்.எல்.டி மட்டுமே, சென்னைக்கு ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்படும். காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, கடந்த மாதம் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு கர்நாடகம் 9.19 டி.எம்.சி காவிரி நீர் வழங்க உத்திரவிட்டபடி, கர்நாடகம் வழங்க அழுத்தம் கொடுப்பார்கள். உபரி நீரை கொண்டு, 900 ஏரிகளை நிப்பும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில் மேட்டூர் நகர அதிமுக செயலாளர் சந்திரசேகரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் லலிதா சரவணன், துணை தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: