×

படிப்போடு அயல்நாட்டு மொழிகளை கற்றால் வேலை உறுதி பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அறிவுரை

திருச்சி, ஜூன் 25: சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் இவற்றில் நடத்த உள்ள ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு தொலைநோக்கு-2019 என்ற பெயரில் நேற்று திருச்சி அரசு கலையரங்கம் அரங்கில் நடந்தது. தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பு தலைவர் முனிரத்தினம் மற்றும் செயலாளர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் துறை தலைவர் அன்புத்தம்பி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஜிபிஎஸ் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் ராஜகோபாலன், கே7 கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புருஷோத்தமன், அரசு தொடக்க கல்வி இயக்கத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பேசினர்.
இக்கருத்தரங்கில் வேலை வாய்ப்பு என்பது பொறியியல் படிப்பிலோ அல்லது பாடத் திட்டத்தில் இல்லை. மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்போடு அத்துறை சார்ந்த புதிய தொழில் நுட்பங்கள், அயல்நாட்டு மொழிகள், ஸ்கில்ஸ் எனப்படும் மென்திறன்கள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு கிடைப்பது நிச்சயம் என்பதை விளக்கி கூறினர். மாணவ, மாணவிகள் 1500க்கும் மேற்பட்டோர்் கலந்து கொண்டனர்.



Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு