முறைகேடாக மணல் அள்ளப்பட்ட அக்னியாற்றில் 5 கி.மீ., நடந்து சென்று கலெக்டர், எஸ்பி அதிரடி ஆய்வு

பட்டுக்கோட்டை, ஜூன் 25:முறைகேடாக மணல் அள்ளப்பட்ட அக்னியாற்றில் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று கலெக்டர் அண்ணாதுரை, எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மாளியக்காடு. தொக்காலிக்காடு. மகிழங்கோட்டை கிராமங்களில் அக்னியாற்றில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டுள்ளதை கலெக்டர் அண்ணாதுரை, எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் அதிவிரைவு காவல்படையுடன் சென்று ஆய்வு செய்தனர்.

மாளியக்காடு பகுதியில் கலெக்டர் அண்ணாதுரை, எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அக்னியாற்றில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டனர்.அப்போது அக்னியாற்றில் முறைகேடாக மணல் எடுப்பவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். மேலும் முறைகேடாக மணல் அள்ளப்படும் பகுதிகளில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ள உத்தரவிட்டார். ஆய்வின்போது பட்டுக்கோட்டை ஆர்டிஓ பூங்கோதை. பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி, பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: