இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் திருவையாறு அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் தினவிழா

திருவையாறு, ஜூன் 25: திருவையாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது.தலைமையாசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் உஷாராணி பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பேசினார். உடற்கல்வி ஆசிரியை செல்வராணி பேசினார். சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் போட்டகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைக்கப்பட்டது.

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் அருகே உள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம், ஜூனியர் ரெட்கிராஸ், தேசிய பசுமைப்படை மற்றும் இதர அமைப்புகள் சார்பில்சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது.

தலைமையாசிரியர் மனோகரன் தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். பள்ளி ஆசிரியர்கள் பழனித்துரை, பாலசுப்பிரமணியன் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கோபிகிருஷ்ணா, இளையோர் செஞ்சிலுவை சங்க அலுவலர் சரவணன், உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: