×

கேரளாவில் பன்றிக்காய்ச்சல் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் உஷார்

கோவை, ஜூன் 25: கேரள மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் உஷார் செய்யப்பட்டுள்ளது.  கேரள மாநிலம் வயநாடு, பாட்டவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக கேரளா எல்லைப்பகுதியில் உள்ள மாவட்டங்கள் உஷார் ெசய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரளாவுக்கு அருகில் உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு 3 மாவட்டங்களில் சுகாதார துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: கேரள மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் இல்லை. இருப்பினும் தமிழக, கேரள எல்லைப்பகுதியில் பாதிப்பு  ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு குறித்து தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மேலும், பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. நோய் தடுப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனையை உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Kerala ,Tirupur ,districts ,Nilgiris ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...