வேளாண் பல்கலைக்கு காய்கறி ஆராய்ச்சி விருது

கோவை, ஜூன் 25: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காய்கறி பயிர்கள் ஆராய்ச்சி கூட்டம் நடந்தது. இதனை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வாரணாசி இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தியது.  கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் சுப்பிரமணியன் வரவேற்றார். மத்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஜெகதீஷ் சிங் அறிக்கை சமர்ப்பித்தார். வேளாண்மை ஆராய்ச்சி குழுமத்தின் பொது உதவி இயக்குனர் ஜானகிராமன், மத்திய எண்ணை வித்து ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் ரத்தினம், ஒடிசா வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராய் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் இந்த ஆண்டிற்கான அமித் சிங் நினைவு விருது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் காய்கறி பயிர்கள் துறைக்கு அளிக்கப்பட்டது. இதில், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், தோட்ட கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் புகழேந்தி, காய்கறி பயிர்கள் துறை பேராசிரியர் சுவர்ணபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Agricultural University ,
× RELATED தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு...