கோவை மத்திய சிறையில் காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, ஜூன் 25: கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சிறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கோவை மத்தியசிறையில் காலியாக உள்ள ஒரு சிப்ப எழுத்தர், ஒரு நாவிதர், இரண்டு சமையலர், ஒரு லாரி டிரைவர், இரண்டு நெசவுப்பணியாளர், ஒரு பாய்லர் பயர்மேன், சிங்காநல்லூர் திறந்த வெளிச்சிறையில் ஒரு சமையலர், கட்டுப்பாட்டு கிளைச்சிறைகளில் காலியாக உள்ள 9 துப்புரவு பணியாளர் மற்றும் 10 சமையலர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவற்கப்படுகின்றன.
 இந்த பதவிகளுக்கு தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை தொலைபேசி எண் குறிப்பிட்டு அனைத்து சான்றிதழ்களுடன் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு முகவரியிட்டு வரும் ஜூலை 6ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.  இந்த பதவிகளுக்கான நேர்காணல் தேதி மற்றும் நேர விபரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Central Prison ,Coimbatore ,
× RELATED திருமண உதவி கேட்டவர்களில் 1,500 பேரின் விண்ணப்பங்கள் தள்ளுபடியா?