சூலூரில் சாலை விரிவாக்க சர்வே பணிகள் துவக்கம்

சூலூர், ஜூன் 25: சூலூரில் சாலை விரிவாக்கம் செய்ய அளவீட்டுப் பணி துவங்கியது. சூலூர் காங்கேயம்பாளையம் முதல் பாப்பம்பட்டி பிரிவு வரையிலான சாலை விரிவாகப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சூலூர் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் செயல்படுவதாக திருச்சி சாலை விரிவாக்க குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலைப்பணிகளை தடுத்திநிறுத்த போவதாக அறிவித்தனர்.  அதற்காக தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சியினர் கோட்டாட்சியர் தனலிங்கத்திடம் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் நேற்று தாலூகா சர்வேயர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சர்வே செய்யும் பணி துவங்கியுள்ளனர். இந்த சர்வே பணி கண்துடைப்பு என குமுறும் பொதுமக்கள் சாலையின் இரு பக்கமும் சுமார் 30 அடி அளவிற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், வருவாய்த்து 1936ம் ஆண்டு ஆவணங்களின் படி அளவீடு செய்தால் தான் உண்மையான ஆக்கிரமிப்பு தெரியவரும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Launch ,Sulur ,
× RELATED கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு டிச. 2ம் தேதி துவக்கம்