ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் ஒரு லட்சம் இருதய அறுவை சிகிச்சை


கோவை, ஜூன் 25: கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் இருதய பிரிவு தொடங்கி 45 ஆண்டுகள் ஆகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில், ஆண்டு விழா கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது. மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி ரகுபதி வேலுசாமி சிறப்புரையாற்றினார். இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் வைத்தியநாதன் வரவேற்றார். அவர் பேசுகையில், ‘‘குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் கடந்த 1974-ம் ஆண்டு 3 படுக்கை வசதிகளுடன் இருதய சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது. தற்போது 45வது ஆண்டில் அடியெடுத்தும் வைக்கிறது. இதுவரை, 1 லட்சம் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம்’’ என்றார். விழாவில், டாக்டர்கள் நடராஜன், ராஜ்பால் உள்பட பலர் பங்கேற்றனர்

Tags : GKNM Hospital ,
× RELATED ஒரு லட்சம் புத்தகங்கள்!