இந்து முன்னணி கொடி கம்பம் வெட்டி சாய்ப்பு

கோவை, ஜூன் 25: கோவை, செல்வபுரத்தில் இந்து முன்னணி கொடி கம்பத்தை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதனால் அதன் நிர்வாகிகள் திரண்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகில் இந்து முன்னணி சார்பில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இதை நேற்று முன் தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். மேலும் இந்து முன்னணி கொடியையும் கிழித்து சேதப்படுத்தியிருந்தனர்.  மாவட்ட துணைத்தலைவர் மகேஸ்வரன், மாவட்ட செயலாளர் ஜெயசங்கர் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட இந்து முன்னனி அமைப்பை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு வந்த செல்வபுரம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கொடி கம்பத்தை சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர். மேலும் கொடிக்கம்பம் இருந்த இடத்தில் பாதுகாப்பிற்காக 20க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED திருமாவளவன் மீது இந்து முன்னணி போலீசில் புகார்