புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 3வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புழல்: புழலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சரிவர சம்பளம் வழங்காததால் 3வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை புழலில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் தனியார் நிறுவனத்தின் மூலம் காவலர்கள் 18 பேர் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதம்தோறும் ₹6500 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சம்பளம் சரிவர வழங்கப்படவில்லை. இம்மாதம் இதுவரை சம்பளம் வழங்கப்படாததால், பணியாற்றும் காவலர்கள் கடந்த 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: