புதூர் பகுதியில் அதிகாரிகள் அதிரடி 13 முறையற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

இடைப்பாடி, ஜூன் 21: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், இடைப்பாடி-இருப்பாளி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து, பூலாம்பட்டி, பனமரத்துப்பட்டி, இடங்கணசாலை, இளம்பிள்ளை ஆகிய 4 பேரூராட்சிகள், இடைப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, தாரமங்கலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, நங்கவள்ளி, சேலம் ஆகிய 8 ஒன்றியங்களில் உள்ள 1,045 கிராம ஊராட்சிகளுக்கு நாளொன்றுக்கு 33.51 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகித்து வருகின்றனர்.

இந்த திட்டத்தில், மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் ஏ.புதூர் ஊராட்சியில் பிரதான குழாய்களில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தது. இதனால் பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகிக்க முடியவில்லை. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன், கலெக்டர் ரோகிணி உத்தரவின் பேரில், இடைப்பாடி கோட்ட நிர்வாக பொறியாளர் சந்திமோகன் தலைமையில் உதவி பொறியாளர் சேகர் மற்றும் அலுவலர்கள், கொங்கணாபுரம், இடைப்பாடி, மகுடஞ்சாவடி போலீசாருடன் சென்று, புதூர் பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். இதில் 13 இடங்களில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டன.

Related Stories: