×

ஆட்டையாம்பட்டியில் பேரூராட்சி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது

ஆட்டையாம்பட்டி,  ஜூன் 21: ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் எதிரில், கடந்த  1978ம் ஆண்டு பேரூராட்சி சார்பில் 5 கடைகள் கட்டப்பட்டு, வாடகைக்கு  விடப்பட்டது. இங்கு பழக்கடை, மளிகை கடை, டீக்கடை மற்றும் மருந்து கடைகள்  இயங்கி வருகிறது. கடைகளுக்கு ₹50 ஆயிரம் முதல் ₹65  ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டிடம், கட்டி 41  ஆண்டுகள் ஆவதால், விரிசல் விழுந்து உறுதித்தன்மை இழந்துள்ளது. மேற்கூரையில் பல இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து,  கம்பிகள் வெளியே தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, சீனி  என்பவரின் கடை முன்பு, மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அங்கிருந்த சீனியின் தாயாருக்கு தலையில் படுகாயம்  ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற  4 கடைகளின் சுவரிலும், ஆங்காங்கே விரிசல்  ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய கடைகள் கட்ட வேண்டும். என  கடைக்காரர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : barracks ,Alayampatti ,
× RELATED 2 கட்டுமான நிறுவன அதிபர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை