ஓமலூர் வட்டார விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க அறிவுரை

ஓமலூர், ஜூன் 21: ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில், தற்போது நிலவும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகளிலும் நீர் வற்றிப்போனது. இதையடுத்து விவசாயிகள் சொட்டுநீர் பாசன திட்டத்தை செயல்படுத்த, வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

தமிழக அரசின் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறைகளின்  சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானிய விலையில் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம்.

பந்தல் காய்களில், பசுமை குடில்கள், தென்னந் தோப்புகள், எஸ்டேட் பயிர்கள், பழ வகை மரங்கள், மூலிகை பயிர்கள், மலர்கள் போன்ற அனைத்து பயிர்களுக்கும் உயர் உச்சகட்ட வருமானம் பெற உதவும் சொட்டுநீர் பாசனத்தை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: