கொங்கணாபுரம் ஆகநல் பள்ளியில் உலக யோகா தினம்

இடைப்பாடி, ஜூன் 21: கொங்கணாபுரம் ஆகநல்-அப்பு அறிவாலயம் ஆகிய இருபள்ளிகள் இணைந்து உலக யோகா தினத்தை கொண்டாடினர். விழாவுக்கு இடைப்பாடி எஸ்பி கண் மருத்துவனையின்  மருத்துவர்  சிங்காரவேலு தலைமை வகித்து பேசுகையில், ‘மனவளக்கலை யோகாவில் கண் பயிற்சியை தொடர்ந்து செய்வதால், பார்வை குறைபாடு நீங்கி, கண்ணாடியின்றி பார்க்கவும், படிக்கவும், எழுதவும் முடியும் என்பதை, இப்பள்ளியின் யோகா துறை நிரூபித்துள்ளது.

தொடர்ந்து யோகா செய்தால் பல நோய்களை தடுக்கவும், தீர்க்கவும் முடியும். கல்வியைக் காட்டிலும் சிறந்த ஒழுக்கத்தை பெற யோகா துணை இருக்கும்,’ என்றார்.விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னையைச் சார்ந்த ‘ஹாஹோ சிரிப்பானந்தா’ சம்பத் மாணவர்களுக்கு ‘சிரிப்பு யோகா’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார். நிகழ்ச்சியை பள்ளியின் யோகா துறை சார்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: