×

அருப்புக்கோட்டையில் குடிநீர் பிரச்னையை தீர்க்க சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ அதிகாரிகளுடன் ஆலோசனை

அருப்புக்கோட்டை, ஜூன் 21:அருப்புக்கோட்டையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை சரிசெய்ய  சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனைக்கு பின் அவர் கூறியதாவது: அருப்புக்கோட்டை நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் மோசமாக உள்ளது.  ஒரு நாளைக்கு வைகையிலிருந்து சராசரி 25 லட்சம் லிட்டர் தண்ணீரும், தாமிரபரணியிலிருந்து 35 லட்சம் லிட்டர் தண்ணீரும் மொத்தம் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் நகராட்சிக்கு கிடைத்தது.  தற்போது வைகையில் முழுவதுமாக தண்ணீர் வரத்து இல்லை.  தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்யாத காரணத்தால் தாமிரபரணியில் உள்ள அணைக்கட்டுகளில் நீர்வரத்து இல்லை.தற்போது தாமிரபரணியிலிருந்து சராசரி தினமும் 20 லட்சம் லிட்டர் அளவிற்குதான் தண்ணீர் கிடைக்கிறது.  அதுவும் மின்தடை இருந்தாலும் ஒருநாள் தண்ணீர் வரத்து இல்லாமல் போகிறது.  கிடைக்கக்கூடிய 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வைத்துதான் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கிய இடத்தில் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை பிரித்து கொடுக்க வேண்டியுள்ளது.  15 நாட்கள், 20 நாட்கள் என சுழற்சி முறையில் வழங்கப்பட்ட குடிநீர் தற்போது நாட்கள் தள்ளிப்போகிறது.லாரி, டிராக்டர்கள் மூலம் தண்ணீர் வழங்க ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.

இன்னும் ஒரு சில இதுபோக திருப்புவனத்திலிருந்து வைகை குடிநீர் திட்டம் மூலம் கொண்டு வரப்படும் நீர்பாதையின் அருகே பகிர்மான குழாய்கள் வருகிற வழியில் தற்போது 3 இடங்களில் போர்வெல் போடப்பட்டு அந்த நீரையும் வைகை குடிநீர் வரும் குழாய்களில்  இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் புதிதாக 5 இடங்களில் போர்வெல் போட அனுமதி கேட்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சுமார் 8 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.  நகரின் மேடான பகுதியான புளியம்பட்டி, திருநகரம் பகுதியில் தண்ணீர் செல்ல பலமணி நேரம் ஆகிறது.  அதனால் அதனை சரிசெய்ய ஒரு குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டவும், டவுண் காவல்நிலையம் பின்புறம் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியில் இருந்து தண்ணீர் கொடுக்கவேண்டிய வேலைகளையும் செய்ய உள்ளோம்.
குழாய் பதிக்க வேண்டிய இடங்கள் தனியார் இடமாக உள்ளது.  அவர்களிடம் கேட்டு அந்த இடத்தில் குழாய்கள் பதிக்க வேண்டிய பணிகளை செய்து வருகிறோம்.  மக்களின் சிரமங்களை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.  உங்கள் சிரமத்தில் நானும் நகராட்சி அதிகாரிகளும் புரிந்து கொண்டு எங்களால் ஆன குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்போம்’ என்றார்.



Tags : Sathur Ramachandran ,Aruppukkottai ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...