×

பெரியகுளத்தில் மா விழா

பெரியகுளம், ஜூன் 21: ‘  பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாவிழா நடைப்பெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார்  தலைமை வகித்து மா கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்ர். கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழக இயக்குநர் ஜவகர்லால்(கோவை) முன்னிலை வகித்தார்.  பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ஆறுமுகம்வரவேற்புரை வழங்கினார். வேளாண்ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், முன்னோடி விவசாயிகள் அருண்நாகராஜ்,சந்தானம்,  கிருஷ்ணகிரி சிற்றரசு,சண்முகம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்தில் மா அதிகம் விளையும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி உட்பட பல மாவட்டங்களிலிருந்து மா விவசாயிகள் பங்கேற்றனர். மல்கோவா, நீலம், பங்கனபள்ளி, செந்தூரம், கிளிமூக்கு, காசாலட்டு உட்பட  500 வகையான மா ரகங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன. நவீன மா சாகுபடி தொழில்நுட்பங்கள், பயிர்பாதுகாப்பு, மதிப்புக்கூட்டுதல், விநியோக மேலாண்மை மற்றும் ஏற்றுமதித்திறன் ஆகியவை கலந்துரையாடல் நடைபெற்றது. விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமனோர் பங்கேற்றனர்.  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மா சாகுபடி குறித்த சிறப்பு மலர் வெளியிட்டார். தோட்டக்கலைகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ராஜங்கம் நன்றியுரை வழங்கினார்.
அடையாளம் தெரியாத

Tags : Mao Festival ,Periyakulam ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி