×

பட்டணம்காத்தான் ராஜகாந்தாரி அம்மன் கோயில் கும்பாபிசேகம்

ராமநாதபுரம், ஜூன் 21:  ராமநாதபுரம்  அருகே பட்டணம்காத்தான் ராஜகாந்தாரி அம்மன்  ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 19ம் தேதி காலை 7.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு அனுக்ஞை விநாயகர் பூஜை புண்ணியா வாசனம், பிரவேச பலி, வாஸ்து சாந்தி அங்குரார் பணம், மிருத்சங்கரணம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு  முதல் கால பூர்ணாகுதி தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து யந்த்ர ஸ்தாபனம் அஷ்டபந்தன மருத்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, பூதசுத்தி தனபூஜை, சோம கும்ப பூஜை, பாலிகா பூஜை, கோ பூஜை, நாடி சந்தனம், ஸ்பரிசாகுதி திரவியாகுதி ஹோமம் நடைபெற்று  2ம் கால மஹாபூர்ணாகுதி தீபாராதனைகள் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு மேல் யாத்ரா தானம் கடம் புறப்பாடு ஆலய விமானம் மற்றும் மூலாலய மகா கும்பாபிஷேகம் தொடர்ந்து மகா அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.




Tags : Pattanamkatan Rajakanthari Amman Temple ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை