×

இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை, ஜூன் 21: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளி கிழமை) நடக்கிறது. முகாமில் பிரபல தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, ஆட்களை தேர்வு செய்கின்றன. முகாமில் 10ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐடிஐ. டிப்ளமோ முடித்தவர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் (ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல்) முடித்தவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் இன்று (வெள்ளி) காலை 10 மணியளவில் மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பங்கேற்க வேண்டும். முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது. இத்தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : employment camp ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்