விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது எப்படி?

பழநி, ஜூன் 21: பழநியில் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக பட்டாலியன் போலீசாருக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.சென்னை அதிதீவிர படை சார்பில், ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி முகாம் பழநியில் உள்ள தமிழ்நாடு சிறப்புகாவல்படை 14வது அணி வளாகத்தில் நடந்தது. முகாமில் பேரிடர் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும். விபத்து மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. மேலும் அணைப்பகுதிகளில் பரிசல்களில் தவறி விழுந்தால், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முறைகள், 108 ஆம்புலன்ஸ் சேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் பயிற்சி அளித்தனர். இதில் பட்டாலியன் போலீசார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED இரவு நேரங்களில் முன்னறிவிப்பின்றி...