அதிக மாத்திரை சாப்பிட்ட அரசு பள்ளி ஆசிரியை பலி

பழநி, ஜூன் 21: பழநியில் அதிக மாத்திரைகளை சாப்பிட்ட அரசுபள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.பழநி டவுன், பழநியாண்டவர் நகரை சேர்ந்த பொன்ராஜ் மனைவி கலாவதி (49). கோதைமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையகாக பணிபுரிந்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கலாவதி, நேற்று முன்தினம் வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதாக தெரிகிறது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கலாவதி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழநி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags : Teacher ,high school ,
× RELATED அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிராமிய...