பழநி அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை சப்கலெக்டர் விசாரணை

பழநி, ஜூன் 21: பழநி அருகே குடும்பத் தகராறில் தூக்கிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சப்கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.பழநி அருகே 54- புதூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (25). இவர்களுக்கு 1 மகன் உள்ளார். கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த நந்தினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீரனூர் போலீசார் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் சப்கலெக்டர் அருண்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags :
× RELATED அனைத்து வட்டாரங்களிலும் நிவாரண...