பள்ளி வாகனம் மோதி போலீஸ்காரரின் 2 வயது மகன் பலி பழநி அருகே சோகம்

பழநி, ஜூன் 21: பழநி அருகே பள்ளி வாகனம் மோதி போலீஸ்காரரின் 2 வயது மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பழநி அருகே சரவணபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (34). அம்பிளிக்கை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஆதீஷ் (2). நேற்று சுரேஷின் உறவினரான வனிதா பழநி பாரத் வித்யா பவன் பள்ளியில் படிக்கும் தனது குழந்தையை பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட ஆதீஷை அழைத்து சென்றுள்ளார். அப்போது வாகனத்தின் முன்புறம் சென்ற ஆதீஷை கவனிக்காமல் டிரைவர் வாகனத்தை கிளப்பி உள்ளார்.

இதில் வாகனம் மோதி தலையில் படுகாயமடைந்த ஆதீஷை உயிருக்கு ஆபத்தான நிலையில் பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே ஆதீஷ் பரிதாபமாக உயிரிழந்தான். பின்னர் அவனது உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.சிறுவனின் உடலை பார்த்த அவர்களது உறவினர்கள் கதறி அழுதது காண்போர் நெஞ்சை பதறச் செய்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீரனூர் போலீசார் பள்ளி வாகன டிரைவர் கோரிக்கடவை சேர்ந்த பிரபு (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags : policeman ,
× RELATED மயிலாப்பூரில் போதையில் மப்டியில்...