×

ஒலிம்பியாட் போட்டித் தேர்வில் திசையன்விளை பள்ளி சாதனை

திசையன்விளை, ஜூன் 21: நெல்லையில் நடந்த எஸ்.ஓ.எப். ஒலிம்பியாட் போட்டித் தேர்வில் திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி தேசிய அளவில் சாதனை படைத்துள்ளது. போட்டித் தேர்வில் 2வது சுற்றில் 10ம் வகுப்பு மாணவர் ஜோபிளின்டன் கணிதத்திலும், 8ம் வகுப்பு மாணவிகள் லிட்ரிசியா கணிதம் மற்றும் அறிவியலிலும், ஸ்டெபி செமிரா ஆங்கிலத்திலும், 4ம் வகுப்பு மாணவர் விபிஷ்னு கணிதத்திலும், அதே வகுப்பு மாணவி அபிலயா ஆங்கிலத்திலும் தேசிய அளவில் முதல் 500 இடங்களை பெற்று சாதனை படைத்தனர். இவர்களை பள்ளித் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், துணை முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.




Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி