×

அடிப்படை வசதி கோரி ராதாபுரம் யூனியனை கிராம மக்கள் முற்றுகை

ராதாபுரம், ஜூன் 21:  அடிப்படை வசதி மற்றும் சீராக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி உதயத்தூர் கீழூர் கிராம மக்கள் ராதாபுரம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ராதாபுரம் அடுத்த உதயத்தூர் கீழூர் கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் சீராக விநியோகிக்கப்படவில்லை. இதனால்  அவதிப்பட்ட கிராம மக்கள், ராதாபுரம் ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பின்னர் இதுகுறித்த கோரிக்கை மனுவை ஆணையாளர் செல்வராஜிடம் வழங்கினர்.

 அதில், சீராக குடிநீர் வழங்க வேண்டும். பொது மயானத்திற்கு பாதை அமைத்துத்தர வேண்டும். இரவில் எரியாத தெரு விளக்குகளை சரிசெய்ய வேண்டும். அங்கன்வாடி அருகே உள்ள ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றின் மேல்பகுதியில் மூடி அமைக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை கொட்டக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தியிருந்தனர்.  இதுகுறித்து உரிய நடவடிக்கை  எடுப்பதாக ஆணையாளர் செல்வராஜ், துணை ஆணையாளர் செந்தில் உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட மக்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Tags : facilities ,Radapuram Union ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...