×

மின்வெட்டை கண்டித்து களக்காடு மின்வாரிய அலுவலகம் முற்றுகை

களக்காடு, ஜூன் 21:  களக்காட்டில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் 87 பேரை போலீசார் கைது செய்தனர். களக்காட்டில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதை கண்டித்தும், சீராக மின் விநியோகம் செய்ய வலியுறுத்தியும் களக்காடு மின்வாரிய அலுவலகத்தை திமுகவினர் நேற்று முற்றுகையிட்டனர். இதற்காக களக்காடு ஒன்றியச் செயலாளர் ராஜன் தலைமையில்  திரண்ட திமுகவினர் ஊர்வலமாக நடந்துவந்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதில் மாவட்ட துணைச் செயலாளர் சித்திக், தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் செல்வகருணாநிதி, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜின்னா, ஒன்றிய துணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், திருக்குறுங்குடி நகரச் செயலாளர் கசமுத்து, இளைஞர் அணி நகர அமைப்பாளர் ஏசுதாஸ், துணை அமைப்பாளர்கள் அருணாசலம் என்ற வெள்ளையன், முகைதீன், மாவட்ட பிரதிநிதி பீட்டர், அருணாசலம் என்ற மைனர் பஞ்சாயத்து கிளைச் செயலாளர்கள் ஜான்பால், திருமலைநம்பி, ஐயப்பன் கர்ணன், செல்வம், கோபால், கொம்பையா, முன்னாள் கவுன்சிலர் சவுந்தரபாண்டியன் என திரளானோர் பங்கேற்றனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 87 பேரையும் நாங்குநேரி டி.எஸ்பி இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் களக்காடு சபாபதி, நாங்குநேரி சாந்தி, விஜயநாராயணம் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

Tags : Siege ,Kalakkadu Power Station ,
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...