தூத்துக்குடியில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தூத்துக்குடி, ஜூன் 21: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (21ம் தேதி) காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி ஆசிரியர் காலனி 1வது தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால்  பத்தாம் வகுப்பு, பிளஸ்2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்போர் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Related Stories: