×

தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு கட்டுரை அனுப்ப மாணவர்களுக்கு அழைப்பு

கரூர், ஜூன் 21: தண்ணீர் சிக்கனம் குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு கட்டுரை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைகுறைவு, நிலத்தடி நீர் குறைவினால் அண்மைக்காலமாக தமிழ்நாடு முழுவதும் சென்னை போன்ற பெருநகரங்களிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. விடுதிகள் மூடப்படுகின்றன.

பெருநிறுவனங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிசெய்ய திட்டமிடுகிறது. லாரி தண்ணீர் பல மடங்கு அதிகரித்தாலும் கிடைக்க நாள் கணக்கு காத்திருக்க வேண்டியதிருக்கிறது. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம், தண்ணீர் சிக்கனத்தில் என்பங்கு என்ற தலைப்பில் பல சிறப்பான நடைமுறை உதாரணத்திற்கு தண்ணீர் குழாயை திறந்துவிட்டு முகம், கை, கால், சாப்பாட்டு தட்டு கழுவுவதை மக்கில் தண்ணீரு பிடித்து கழுவுவதால் 3ல் ஒருபங்கு தண்ணீரே தேவைப்படும் தெருக்குழாய் இணைப்பில் மூடாமல் வீணாகும் தண்ணீர் இடையே குழாய் உடைப்பில் வீணாகும் தண்ணீர் இதுபோன்ற குறைகளை நாமும்களையலாம் என்கிற நோக்கில் ஏ4 அளவு தாளில் இரண்டு பக்க கட்டுரையை 6ம்வகுப்பு முதல் பிளஸ்2 படிக்கும் பள்ளி மாணவ மாணவியரும் கல்லூரி மாணவ மாணவியரும் 3பக்க அளவிலும், கட்டுரைகளை எழுதி வரும்30ம்தேதிக்குள் கரூர் திருக்குறள்பேரவை செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.

சிறந்த 30 கட்டுரைகளுக்கு சான்றிதழ், ரூ.120 மதிப்புள்ளநூல் பரிசாக வழங்கப்படும். சிறந்த கட்டுரை மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்படும் என திருக்குறள்பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா