×

வாசகர்கள் மகிழ்ச்சி போலி உணவு பாதுகாப்பு அதிகாரிகளை கண்டால் புகார் செய்யலாம்

கரூர், ஜூன் 21: போலி உணவு பாதுகாப்பு அதிகாரிகளை கண்டால் புகார் தெரிவிக்குமாறு கலெக்டர் அறிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எனக்கூறிக்கொண்டு, உணவு வணிகர்களிடம் பணம் பறிப்பதாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதன்அடிப்படையில் வாங்கல் பகுதியில் ஒருபேக்கரியில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு கடந்த வாரம் 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே அனைத்து உணவு வணிகர்களும், இதுபோன்ற நிகழ்வுகளில் உடனடியாக கரூர் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்களின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு அடைய அறிவுறுத்தப்படுகிறது. டாக்டர் சசிதீபா, 88256 60862 கரூர் மாவட்டம், சக்தீஸ்வரன் 96298 03197 அரவக்குறிச்சி, தாந்தோணி வட்டாரம், சுரேஷ்கண்ணன் 99941 33521 க.பரமத்தி, குளித்தலை, நகரம் வட்டாரபகுதி. முருகேசன் 99435 66724 கிருஷ்ணராயபுரம், தோகமலை, கடவூர், வட்டாரம். கரூர் நகரம், கரூர் வட்டாரபகுதி, மேலும் கலெக்டர் அலுவலக வளாகம் இணைப்புக்கட்டடம் அறைஎண்66ல் உள்ளஉணவுப் பாதுகாப்பு துறைக்கு நேரடியாகவோ அல்லது 04324 255347 என்ற எண் அல்லது 94440 42322 என்ற வாட்ஸ்அப் புகார் எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படியும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்,

Tags : food security officers ,
× RELATED மதுரையில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட...