×

மது, புகையிலை விற்ற 6 பேர் கைது

நாகர்கோவில், ஜூன் 21:  குமரி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகரித்து உள்ளது. இதுபோல் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க எஸ்பி நாத் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் சோதனை நடத்தினர். அருமனை போலீசார் ரோந்து சென்ற போது, மடத்துவிளையை சேர்ந்த பொன்னையன் மனைவி சுந்தரபாய்(47) அப்பகுதியில் மது விற்றுக்கொண்டு இருந்தார். அவரை கைது செய்த போலீசார் 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  இதுபோல் மார்த்தாண்டம் போலீசார் சீனிவிளை பகுதியில் சோதனை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த வில்சன்(50) என்பவர் மதுவிற்றுக்கொண்டு இருந்தார். அவரை கைது செய்து, 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆசாரிபள்ளம் போலீசார் வசந்தம்நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த தாணுமூர்த்தி(38) என்பவர் மதுவிற்றுக்கொண்டு இருந்தார். அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஈத்தாமொழி போலீசார் ஆத்திக்காட்டுவிளை ஜங்சன் பகுதியில் மதுவிற்ற மங்காவிளையை சேர்ந்த கஜேந்திரன்(32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  இதுபோல் அருமனை போலீசார் அருமனை பகுதியில் பெட்டிகடையில் சோதனை செய்தனர். அப்போது மாத்தூர்கோணத்தை சேர்ந்த லாரன்சின் கடையில் இருந்து 6 புகையிலை பாக்ெகட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மார்த்தாண்டம் போலீசார் மேல்புறம் ஜங்சன் பகுதியில் கடை நடத்தி வரும் பாகோடை சேர்ந்த வர்கீஸ்(65) என்பவர் கடையில் சோதனை செய்தபோது அங்கு இருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வர்கீசையும் போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED பெருஞ்சாணியில் 56.6 மி.மீ மழை பதிவு குமரி...