×

அரியலூரில் பொருளாதார கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

அரியலூர், ஜூன் 21: மத்திய அரசின் புள்ளி விபரங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றும் அமைச்சகம் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் 7வது பொருளாதார கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படவுள்ளது. இந்த பணிக்கான பயிற்சி முகாம், அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. அரியலூரில் உள்ள தேசிய புள்ளி விவரங்கள் கணக்கெடுப்பு அலுவலக இணை இயக்குனர் ராமமூர்த்தி, முதுநிலை புள்ளி விபர அதிகாரிகள் வினோத்தரசிங், அபர்ணா நாராயணன் ஆகியோர் பங்கேற்று அனைத்து தரப்பு மக்களின் பொருளாதார நிலை தொடர்பான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து விளக்கம் அளித்தனர்.

முகாமில் பொதுசேவை மையங்களை நடத்துபவர்கள் பங்கேற்றனர். கிராம அளவிலான தொழில் முனைவோர் என அழைக்கப்படும் இவர்களை கொண்டு 7வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடத்தப்படவுள்ளது. பொருளாதார கணக்கெடுப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், அரியலூர் மாவட்டத்தின் கிராம அளவிலான தொழில்முனைவோர் சங்க தலைவர் விமல்ராஜ், செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Economic Survey Training Camp ,Ariyalur ,
× RELATED விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை