×

புகைமண்டலத்தால் மக்கள் அவதி கூட்டு பண்ணையம் குறித்த பயிற்சி

அரியலூர், ஜூன்21: அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரம் பாக்கியநாதபுரம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணையம் குறித்த பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் லதா தலைமை வகித்து கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகள் குழுக்களாக செயல்படுவதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்தும் விளக்கி கூறினார். துணை வேளாண்மை அலுவலர் பால்ஜான்சன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைமதி ஆகியோர் பேசினர்.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா