×

பொக்லைன், லாரி பறிமுதல் அரியலூரில் நடந்த ஜமாபந்தியில் 337 மனுக்களுக்கு உடனடி தீர்வு

அரியலூர், ஜூன் 21: அரியலூரில் நடந்த ஜமாபந்தியில் 337 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் 1428ம் பசலி ஆண்டுக்கான 2ம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி டிஆர்ஓ தலைமையில் நடந்தது. இதில் 465 மனுக்கள் பெறப்பட்டு 337 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 90 மனுக்கள் விசாரணையில் உள்ளது.

செந்துறை தாசில்தார் அலுவலகத்தில் உடையார்பாளையம் ஆர்டிஓ தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 356 மனுக்கள் பெறப்பட்டு 158 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 141 மனுக்கள் விசாரணையில் உள்ளது. ஆண்டிமடம் தாசில்தார் அலுவலகத்தில் அரியலூர் ஆர்டிஓ தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 555 மனுக்கள் பெறப்பட்டு 190 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெறும் இடங்கள்: ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் குண்டவெளி உள்வட்டத்துக்கு உட்பட்ட பாப்பாகுடி, தர்மசமுத்திரம், வங்குடி, இளையபெருமாள்நல்லூர், குண்டவெளி, முத்துசேர்வாமடம், காட்டகரம், குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, குருவாலப்பர்கோவில் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடக்கிறது.     

அரியலூர் தாசி்ல்தார் அலுவலகத்தில் டிஆர்ஓ தலைமையில் கீழப்பழூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட மல்லூர், வாரணவாசி, பார்பணச்சேரி, பூண்டி, மேலப்பழூர், கீழையூர், கீழப்பழூர், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூர், சன்னாவூர் பளிங்காநத்தம், கரைவெட்டி, கீழக்காவட்டாங்குறிச்சி, வெற்றியூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடக்கிறது.

செந்துறை தாசில்தார் அலுவலகத்தில் உடையார்பாளையம் ஆர்டிஓ தலைமையில் மாத்தூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட சன்னாசிநல்லூர், தளவாய், ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, மணக்குடையான், அயன்தத்தனூர், குழுமூர், மணப்பத்தூர், அசாவீருன்குடிக்காடு, துளார் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.

Tags : petitions ,Ariyalur ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...