×

அணைப்பாளையம் பகுதியில் பாலம் அமைக்கும் பணி முடக்கம்

திருப்பூர், ஜூன் 21:திருப்பூர் நகருக்குள் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, மங்கலம் ரோடு, தாராபுரம் ரோடு, பி.என்.,ரோடு, அவிநாசி ரோடு, காங்கயம் ரோடு, ஊத்துக்குளி ரோடுகளை இணைக்கும் வகையில், 49 கி.மீ., ரிங் ரோடு அமைக்கும் பணி, கடந்த சில ஆண்களுக்கு முன் துவங்கியது. இந்த ரிங் ரோட்டில், மங்கலம் ரோடு - காலேஜ் ரோடுகளை இணைக்கும் வகையில், அணைப்பாளையம் பகுதியில், நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம், தண்டவளத்தின் குறுக்கே, ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு, கடந்த, 2006ல் நிதி ஒதுக்கப்பட்டது. இருப்பினும் நீதிமன்றத்தில் நிலம் எடுப்பது தொடர்பான வழக்கு உள்ளிட்ட காரணத்தால் இந்த பாலப்பணி இழுபறியானது. இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு பிறகு மீண்டும் பால பணி துவங்கியது. மேலும் வேலம்பாளையம் ரோடு பகுதியில், 222.30 மீட்டர் நீளம்; ரயில்வே துறை சார்பில், தண்டவாளத்தின் குறுக்கே, மேற்குபகுதியில், 32.40 மீட்டர் நீள பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கின. முதல் கட்டமாக வேலம்பாளையம் செல்லும் ரோடு பகுதியான ரங்கநாத புரத்தில் பாலப்பணிகள் துவங்கி சில நாட்களிலிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பால பணிகளை முடிக்க 18 மாதங்கள் திட்டமிடப்பட்ட நிலையில் பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் பல வேலைகள் நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இந்த பாலம் கட்டும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பாலப்பணிகளை துவங்கி நிறைவு செய்யாமல் இருப்பதால் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே கிடப்பில் போடப்பட்டிருக்கும் பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : dam area ,
× RELATED பெரியகுளம் அணை பகுதியில் தாழ்வாக...