×

திருப்பூர் மாவட்டத்தில் கணினி ஆசிரியர் தகுதி தேர்வில் 626 பேர் பங்கேற்கின்றனர்

திருப்பூர், ஜூன் 21: திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ள கணினி ஆசிரியர் தகுதித் தேர்வை மூன்று மையங்களில் 626 பேர் எழுத உள்ளனர்.  அரசு பள்ளிகளில் 814 முதுநிலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு, வருகிற 23ம் தேதி, போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுக்கான விண்ணப்பம் பதிவு, மார்ச் 20ம் தேதி துவங்கி, பிப்., 10ம் தேதி முடிந்தது. தேர்வு எழுத தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள், தேர்வு செய்யப்பட்டு ஹால் டிக்கெட் வெளியானது. இத்தேர்வு எழுத, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள ஏஞ்சல் பொறியியல் கல்லூரி, ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி மற்றும் பல்லடத்தில் உள்ள புரபசனல் பொறியியல் கல்லூரி ஆகிய மூன்று மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஏஞ்சல் கல்லூரியில் 100 பேர், ஜெய்ஸ்ரீராம் கல்லூரியில் 250 பேர், புரபசனல் கல்லூரியில் 276 என மொத்தம் 626 பேர் எழுதுகின்றனர் என மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சாந்தா தெரிவித்தார்.

Tags : Tirupur ,district ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் 5 எம்பி தொகுதி