தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மாநகராட்சி பகுதிகளில் 97 கடைகளில் ஆய்வு

ஈரோடு, ஜூன் 21:ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து நேற்று ஒரே நாளில் 97 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவின்பேரில் மாநகராட்சி பகுதிகளில் நேற்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 4 மண்டலங்களுக்குட்பட்ட பாரதிதாசன் வீதி, டீச்சர்ஸ் காலனி, ஈவிஎன் ரோடு, திருநகர்காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகளில் ஆய்வு செய்தனர். இதேபோல 4வது மண்டலத்திற்குட்பட்ட ரயில் நிலையம் முன்புற பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார அலுவலர் ஜாகிர்உசேன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் நாச்சிமுத்து, மதன்மோகன், மணிவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர். கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும், கேரி பேக்குகள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டனர். நேற்று நடந்த ஆய்வில் 97 கடைகளில் மேற்கொள்ளப்பட்டதில் 17 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, கடை உரிமையாளர்களுக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Related Stories: