×

ரூ.25 ஆயிரம் அபராதம் குவிண்டாலுக்கு ரூ.3500 வழங்ககோரி நெல்களை சாலையில் கொட்டி விவசாயிகள் நூதன போராட்டம்

கும்பகோணம், ஜூன் 21: குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் கதிர்களை ஏந்தி நெல்களை சாலையில் கொட்டி மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடந்தது. தருமராஜன் தலைமை வகித்தார். விவசாயி ஆதிகலியபெருமாள் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் தமிழக அரசு 2016ம் ஆண்டு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.54.65 கோடியும், 2017ம் ஆண்டில் ரூ.56.96 கோடியும், 2018ம் ஆண்டு ரூ.113 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இந்தாண்டுக்கு இதுவரை எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. உடனடியாக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். குடிநீர் பிரச்னை கடுமையாக உள்ள இந்த நிலையில் தமிழகத்தை முழுமையாக வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

2016- 17, 2017- 18ம் ஆண்டுகளுக்கு உரிய பயிர் மகசூல் இழப்பீடு வழங்குவதில் பல்வேறு முரண்பாடு, குளறுபடி, முறைகேடு, ஊழல் நடந்துள்ளது. எனவே பயனாளிகளின் பட்டியலை இணையதளத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கஜா புயலால் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், திருவையாறு வட்டாரங்களில் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளில் பலருக்கு இழப்பீடு உதவி வழங்கவில்லை. எனவே விரைந்து இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். வேப்பத்தூர் வரதராஜன், திருபுவனம் மகாலிங்கம், சின்னதுரை, விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : struggle ,road ,
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...