×

மத்திய அரசின் புதிய வரைவு கல்விக் கொள்கை சிறப்பு சட்ட மன்ற கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்

மன்னார்குடி, ஜூன்21: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அதன் மாநில தலைவர் மோகனா, பொதுச்செயலாளர் அமல்ராஜன், திருவாரூர் மாவட்ட செயலாளர் பொன்முடி ஆகியோர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதன் விவரம் வருமாறு: தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வரைவு கல்விக் கொள்கையின் மீது ஒரு மாதத்திற்குள் கருத்து கூற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக முதல் அமைச்சர்கள் கூட்டத்தையும் , மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூட்டியுள்ளதாக அறிய முடிகிறது.

மக்களின் வாழ்வு முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான கல்வி. இதில் அடுத்து கால் நூற்றாண்டுக்கு தாக்கத்தை உருவாக் கும் ஓர் ஆவணத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு தயாரித்து சுற்றுக்கு விட்டுள்ள வரைவு கல்விக் கொள்கை அறிக்கையை உடனடியாக தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும். வெளியிட்ட பின்னர் அதில் இருந்து கருத்து கூற ஆறு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும்.

புதிய வரைவு கல்விக் கொள்கையின் பல அம்சங்கள், அடிப்படைகள் ,அதன் விளைவுகள் இந்திய கூட்டாட்சி முறைமைக்கு எதிரானது;. சமூக நீதிக்கு எதிரானது.சமவாய்ப்புக்கு புறம்பானது. தமிழ்நாடு கல்வி வளர்ச்சி மூலம் பெற்றுள்ள முன்னேற்றத்தை பின்னோக்கி தள்ளுவது. ஆகும். எனவே தமிழக முதல்வர் சிறப்பு சட்ட மன்ற கூட்டத்தை கூட்டி அதில் இதுபற்றி விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Tags : government ,session ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...