×

6 ஆண்டுகள் கழித்து மீண்டும் வடபழனி, தாம்பரம் வழியாக விரைவு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: வடபழனி, தாம்பரம் வழியாக ஆறு ஆண்டுகள்  கழித்து அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பான அறிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.  கோயம்பேட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு விரைவு பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் வடபழனி, அசோக் பில்லர், ஆலந்தூர், குரோம் ேபட்டை, தாம்பரம் வழியாக இயக்கப்படும். இந்நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அனைத்து விரைவு பேருந்துகளும் மதுரவாயல் வழியாக இயக்கப்படும் என்று கடந்த 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 6 ஆண்டுகளாக வெளியூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் மதுரவாயல் வழியாக இயக்கப்பட்டு வந்தன. தற்போது, மெட்ேரா மற்றும் மேம்பால பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதால் விரைவு பேருந்துகள் அனைத்தும் வடபழனி, தாம்பரம் வழியாக மீண்டும் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் மற்றும் கோயம்பேடு முதல் மீனம்பாக்கம் வரை நிறைவு பெற்றுள்ளது. மேலும் கோயம்பேடு மற்றும் பல்லாவரம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளும் விரைவாக நடந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 4.30 வரையிலும், இரவு 9.30 முதல் காலை 7 மணி வரையிலும் கோயம்பேடு, வடபழனி, அசோக் பில்லர், ஆலந்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் வழியாக மே மாதம் முதல் இயக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட இடங்களிலிருந்து பயணம் செல்வதற்கும் மற்    றும் வந்தடைவதற்கும் இணையதளம் மூலமாக பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tambaram ,Vadapalani ,Transport Department ,
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!