×

தனியார் பார்சல் நிறுவனத்தில் 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல்: உரிமையாளருக்கு 25 ஆயிரம் அபராதம்

பெரம்பூர்: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், வியாபாரிகள் திருட்டு தனமாக பிளாஸ்டிக் விற்பனை செய்து வருகின்றனர்.  இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ அபராதம் விதிப்படும் என்ற அரசாணை, கடந்த 17ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து அதிகாரிகள் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  அதன்படி, கூடுதல் மாநகர நல அலுவலர் (வடக்கு) ராஜ்குமார், சுகாதார அலுவலர் மாப்பிள்ளை துரை ஆகியோர் தலைமையில், நேற்று பாரிமுனையில் உள்ள வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், மாளிகை கடைகள் உள்ளிட்ட 60 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 30 கடைகளுக்கு 100 ரூபாயும், 3 கடைகளுக்கு 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

 இதேபோல் மண்ணடி, முத்து நாயக்கன் தெருவில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் ₹12 லட்சம் மதிப்பிலான 2 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், தெர்மாகோல் பிளேட்கள், டீ கப்புகள் ஆகியவற்றை மாநகராட்சி ஆதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு  ₹25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags : owner ,
× RELATED ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர்...