×

கேளம்பாக்கத்தில் செயல்படும் கூட்டுறவு கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

திருப்போரூர், ஜூன் 21: திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி பஸ் நிலையம் அருகே கூட்டுறவு ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையில், அந்த கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இதையடுத்து தற்காலிகமாக வண்டலூர் சந்திப்பு அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரேஷன்கடை இடமாற்றம் செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டாமல், தற்காலிக இடத்தில் செயல்படுவதால் ஜோதி நகர், மஜீத் நகர், நந்தனார் நகர், கோவளம் சாலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை, பருப்பு வகைகள் நீண்ட தூரம் உள்ள கடைக்கு செல்ல ஷேர் ஆட்டோவுக்கு பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் சாத்தங்குப்பம் விரிவாக்கப் பகுதி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் எல்லப்பன் தலைமையில், பொதுமக்கள் திருப்போரூர் கூடுதல் வட்டாட்சியர் தரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட ரேஷன்கடையை மீண்டும் பழைய இடத்தில், புதிய கட்டிடத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அந்த மனுவை பெற்று கொண்ட கூடுதல் வட்டாட்சியர், இதுகுறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

Tags : shop ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...